பும்ரா: புயலாக வீசிய பந்துகளில் மாலையாக வந்த சாதனைகள்.!

Sun, 04 Feb 2024-1:17 pm,

இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் பும்ரா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 

 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

 

ஜஸ்பிரித் பும்ரா - 6781 பந்துகள், உமேஷ் யாதவ் - 7661 பந்துகள், முகமது ஷமி - 7755 பந்துகள், கபில் தேவ் - 8378 பந்துகள், அஸ்வின் - 8380 பந்துகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். 

 

இதே போல ஆசிய வேகப்பந்து வீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்து பாகிஸ்தான் வீரர்கள் அக்தர் - இம்ரான் கானை (இருவரும் 37 போட்டிகளில்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பும்ரா (34 போட்டிகளில்) பிடித்துள்ளார்.

 

முதல் இடத்தில் வக்கார் யூனிஸ் உள்ளார். அவர் 27 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link