ATMஇல் இருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பவரா? விதிகள் மாறின, மறக்க வேண்டாம்
கிரெடிட் கார்டுகள் பயன்பாடு இன்று பரவலாகிவிட்ட நிலையில், சற்று கவனக்குறைவாக இருந்தாலும் அவை பெரிய இழப்பை ஏற்படுத்திவிடலாம் என்பதால், விதிமுறைகளை சரியாக தெரிந்துக் கொள்ளுங்கள்
கிரெடிட் கார்டு ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான விதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஏடிஎம்மில் இருந்து கிரெடிட் கார்டில் மூலம் பணத்தை எடுப்பது தொடர்பான விதிமுறைகளை சரியாக தெரிந்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அது பெரிய இழப்பை ஏற்படுத்தும்
கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான அவசியம் வந்தாலும், ஒன்றுக்கு பலமுறை யோசித்து அதை செய்யவும்.
அவசரத் தேவைகள் மற்றும் மாத இறுதியில் ரொக்கப்பணம் தேவைப்படும்போது, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரொக்கப்பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க நேரிடுகிறது
டெபிட் கார்டு மூலம் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பதும் சுலபம் தான். ஆனால் இது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது.
கிரெடிட் கார்டு மூலம் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கு காரணமாக இருக்காது, நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது உறுதி
ஏடிஎம்மில் இருந்து கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் எடுப்பது உங்கள் நிலுவைத் தொகை மற்றும் கடன் பயன்பாட்டு விகிதத்தை அதிகரிப்பதால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மறைமுகமாக குறையலாம்