புத்தாண்டு முதல் இந்த ராசிகளின் மீது சனியின் பார்வை, ஜாக்கிரதை தேவை
கடக ராசி: ஜனவரி 17, 2023 முதல், சனி பெயர்ச்சி உங்கள் ராசிக்கு அஷ்டம சனியாக இருக்கும். இதனால் கஷ்டங்கள் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கும் அர்த்தாஷ்டம சனியில் தாக்கம் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சோம்பேறித்தனம் ஏற்படும். பணியிடத்தில் கவனம் தேவை.
மகர ராசி: ஏழரை சனியின் மூன்றாம் மற்றும் கடைசி பகுதி ஆகும். இதனால் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. நிதி, உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கும்ப ராசி: கும்ப ராசியிலேயே சனியின் சஞ்சாரம் செய்வதால் ஏழரை சனியின் உச்சத்தில் இருக்கிறீர்கள். கும்ப ராசிக்கு அதிபதி சனி கிரகம். இதனால் தாக்கம் குறைவாக இருந்தாலும் தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் மந்தமாக இருக்கும்.
மீன ராசி: மீன ராசிக்கு சனி பெயர்ச்சியுடன், ஏழரை சனியின் முதல் பாகம் தொடங்க உள்ளது. மேலும் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரய சனி ஆகும். இதனால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.