Honda Activa அதிரடி சலுகை: பணமே கட்டாமல் ஸ்கூட்டரை வாங்கலாம், கேஷ்பேக்கும் உண்டு!!
ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் நிறுவனம் (Honda Motorcycle & Scooter India Private Company) ஜூன் 30 வரை ஹோண்டா ஆக்டிவா 125 முன்பதிவு செய்பவர்களுக்கு கேஷ்பேக்கை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ரூ .3,500 வரை கேஷ்பேக்காக பெறுவார்கள். மேலும், இந்த சலுகையுடன் இன்னும் பல அற்புதமான அம்சங்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
Honda Activa 125 -இல் ரூ .3,500 கேஷ்பேக் பெறுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன. எஸ்பிஐயின் கிரெடிட் கார்ட் கொண்டு முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கார்ட் கொண்டு ஸ்கூட்டரை முன்பதிவு செய்தால் 5% வரை கேஷ்பேக் சலுகையைப் பெறலாம். இந்த பம்பர் சலுகையை நீங்களும் பெற விரும்பினால், விரைந்து இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஹோண்டா ஆக்டிவாவை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ கார்ட் மூலம் ஈஎம்ஐயில் ஸ்கூட்டரை வாங்கினால் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு உங்கள் அட்டையிலிருந்து நீங்கள் குறைந்தபட்சம் ரூ .40,000 -க்கான பரிவர்த்தனை செய்ய வேண்டும். ஆகவே, இந்த ஸ்கூட்டரை எந்தவிதமான டவுன் பேமண்டும், அதாவது கட்டணமும் செலுத்தாமல், கேஷ்பேக்குடன் நீங்கள் வாங்க விரும்பினால், அதை SBI-யின் இந்த கார்ட் மூலம் செய்யலாம்.
ஹோண்டாவினுடைய இந்த சலுகையின் மிகப் பெரிய அம்சம் என்னவென்றால், நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு வாங்கினால் ஹோண்டா ஆக்டிவா 125-ஐ வாங்க எந்தவிதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. அதற்கு எந்தவிதமான ஆவணமும் தேவையில்லை. இப்படிப்பட்ட வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது என்பதால், ஹோண்டா ஆக்டிவா 125-ஐ வாங்க விருப்பம் கொண்டவர்கள், விரைவாக செயல்பட்டால் நன்மை பெறலாம்.
சந்தையில் 125 சிசி எஞ்சின் பிரிவில் ஹோண்டா ஆக்டிவா 125 ஒரு சிறப்பு அடையாளத்தைக் கொண்டுள்ளது. ஹோண்டாவின் இந்த ஸ்கூட்டர் திறன் கோணத்தில் மிகவும் சிறந்தது. இதில், நிறுவனம் 4-ஸ்ட்ரோக், ஃபேன்-கூல்ட் எஸ்ஐ எஞ்சினை வழங்கியுள்ளது. இது அதிகபட்சமாக 8.18 பிஎஸ் சக்தியையும் 10.3 என்எம் உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது.
ஹோண்டா ஆக்டிவா 125 அதன் சிறந்த அம்சங்களுக்காக அறியப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில், வாடிக்கையாளர்களுக்கு தானியங்கி பரிமாற்றம் அதாவது ஆட்டோ கியர் கிடைக்கும். இது 5.3 லிட்டர் பெரிய எரிபொருள் தொட்டியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒரே பயணத்தில் நீண்ட தூரம் வரை செல்ல முடியும்.