ரிலையன்ஸ் ஜியோ... ரூ.250 க்கும் குறைவான கட்டணத்தில் கிடைக்கும் சிறந்த திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினாலும், அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) தொடர்ந்து கொடுத்த வண்ணம் தான் உள்ளது. இதில் மலிவான சிறந்த திட்டங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்.
ஜியோ ரூ 209 ப்ரீபெய்ட் திட்டம் : ரூ.209 கட்டணத்தில் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகள் மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகளுடன் வருகிறது. இது 22 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
ஜியோ ஆப் பயன்படுத்திக் கொள்ளும் சலுகை: ரூ.209 கட்டணத்தில் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில்,1 ஜிபி வரம்பிற்கு பிறகும் குறைவான வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். ஜியோவில் வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை இந்த திட்டத்துக்கும் உண்டு. அதேபோல தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கும். ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ ரூ 249 ப்ரீபெய்ட் திட்டம் : ரூ.249 கட்டணத்தில் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. தினமும் 1 ஜிபி டேட்டா என்ற அளவில், 28 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதன் பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.
அன்லிமிடெட் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை: ரூ.249 கட்டணத்தில் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகையுடன், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ ஆப்களின் சலுகை கிடைக்கிறது.
ஜியோ ரூ.189 ப்ரீபெய்ட் திட்டம்: ஜியோவின் இந்த திட்டம் டேட்டா குறைவாகவும் வாய்ஸ் கால் அதபயன்படுத்துபவர்களுக்கு உதவும். 28 நாட்களுக்கு, 2 ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். 2 ஜிபி அளவிற்கு பிறகு, 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.
அன்லிமிடெட் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை: ஜியோ ரூ 189 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் வசதி கிடைக்கும். மேலும், 300 எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதிலும், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களின் சலுகை பயன்படுத்த முடியும்.
செல்போன் கட்டண உயர்வுக்கு பிறகு வாடிக்கையாளர்களை தக்க வைக்க, தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது ஆஃபர்களை அள்ளி வழங்கி வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ 8வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சில ஆபர்களை வழங்கியுள்ளது. ஏர்டெல்லும் சில ஆஃபர்களை வழங்குகிறது.
பண்டிகை கால சலுகை: ஜியோ பயனர்கள், செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை செய்யும் சில குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு, 700 ரூபாய் மதிப்பிலான பலன் கிடைக்கும். இந்த சலுகை ரூ.899 மற்றும் ரூ.999 ஆகிய மூன்று மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களிலும் ரூ.3599 ஒரு வருட திட்டத்திலும் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.