கெட்ட கொலஸ்ட்ராலை ஓட ஓட விரட்ட இந்த 5 விதைகளை சாப்பிட்டால் போதும்
கொலஸ்ட்ரால் பிரச்சினை அதிகமாக இருப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை எடுத்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஊறவைத்த பாதாம் பருப்பை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, ரத்தக் குழாய்களில் கெட்ட கொலஸ்ட்ராலை தவிர்க்க முடியும்.
சியா விதைகளில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது ரத்தத்தில் தேங்கியிருக்கும் கடினமான கொழுப்புகளைக் கரைக்க உதவும்.
இரவு முழுவதும் ஊறவைத்த உலர் திராட்சையை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்துக் கொண்டே இருந்தால் தினசரி ஸ்நாக்ஸில் ஆளி விதையைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.