குக் வித் கோமாளி அஷ்வினுக்கு விரைவில் திருமணம்..? மணப்பெண் யார் தெரியுமா..?

Wed, 19 Jul 2023-12:55 pm,

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், அஷ்வின். இவருக்கு விரைவில் திருமணம் நடைப்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மணப்பெண் யார் தெரியுமா..?

குறும்படங்கள் மற்றும் அல்பம் பாடல்களில் முகம் காட்டி பிரபலமானவர், அஷ்வின். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக வந்தார். 

இதில் கோமாளியாக வந்த ஷிவாங்கி இவரை தன் க்ரஷ் என கூறி அடிக்கடி வம்பு செய்வது வழக்கம். ஆனால், ரசிகர்கள் சிலர் இவர்களுக்குள் காதல் இருப்பதாக தவறாக புரிந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியின் இன்னொரு பங்கேற்பாளர் சுனிதாவும் இவரை தன் க்ரஷ் என குறிப்பிடுவார். 

அஷ்வின், சமீப காலமாக சில படங்களில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். 

இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஒரு பிரபல தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம், அஷ்வின். 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link