Cyclone Burevi: தீவில் சிக்கித் தவித்த 3 மீனவர்களை மீட்டது கடலோர காவல்படை

Thu, 03 Dec 2020-7:04 pm,

மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வானிலை செய்திகளை வெளியிட்டு வருகிறது. 35 பேரிடர் நிவாரண குழுக்கள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையில் தயாராக உள்ளன, தவிர தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவில் தேடல் மற்றும் மீட்பு, நிவாரண பணிகளுக்காக காத்திருக்கின்றனர்.

கடுமையான காற்று, தொடர்ச்சியான மழை மற்றும் குறைந்த தெரிவுநிலை என பல சவால்கள் இருந்தபோதிலும், கடலோர காவல்படையின் மண்டபம் நிலையத்திலிருந்து ஹோவர் கிராஃப்ட் தீவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, சூடான  உணவு, குடிபானங்கள் கொடுத்து ஆசுவாசப்படுத்தப்பட்டனர். பிறகு அவர்கள் இந்திய கடலோர காவல்படை நிலைய மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். இன்று மதியம் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காலை 10 மணியளவில் மணலி  தீவில் (Manalli island) சிக்கித் தவிக்கும் மூன்று மீனவர்கள் சிக்கித் தவிப்பதாக ராமநாதபுர மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை இரண்டு மணி நேரம் நீடித்தது. மூன்று மீனவர்களும் செவ்வாய்க்கிழமையன்று கடலுக்குச் சென்றிருந்தனர். அங்கு ஒரு மணலித் தீவில் சிக்கிக் கொண்டனர்.  அவர்களின் படகு எஞ்சின் பழுதாகிவிட்டது.

இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் புரெவி சூறாவளி காரணமாக வானிலை மோசமடைந்துள்ளது. 2 நாட்களுக்கு அதிகமாக தீவுகளில் சிக்கித் தவித்த மூன்று மீனவர்களை இந்திய கடலோர காவல்படையின் ஹோவர்ராஃப்ட் (hovercraft) மீட்டது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link