ஆரோக்கியமாய் கொழுப்பைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்! நாட்டுக் காய்களின் அற்புத மேஜிக்!
கெட்ட கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் நோயாளிகள் தங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்க முறையான உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளும், நாட்டுக் காய்களும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் காய்கறிகள் எவை என்று தெரியுமா? அவை தான் நாட்டுக்காய்கள்...
நீர்ச்சத்துக் கொண்ட சுரைக்காய், கொலஸ்ட்ராலுக்கு மட்டுமல்ல, பல்வேறு நோய்களுக்கும் எதிரி என்று சொல்லலாம். வாரத்தில் ஓரிரு முறையாவது சுரைக்காயை சேர்த்துக் கொள்ளுங்கள்
அதிக கொழுபைக் கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படும் வெண்டைக்காயில் உள்ள சிறப்பு ஊட்டச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
பாகற்காய் சிறிது கசப்பாக இருக்கும், கொலஸ்ட்ராலுக்கு இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
நாட்டு காய்கறிகளில் மிகவும் சத்து மிகுந்ததாக கருதப்படும் முருங்கைக்காயில் உள்ள சிறப்பு பண்புகள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன
அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்க, உங்கள் உணவில் புடலங்காயை சேர்த்துக் கொள்ளலாம்.
புடலை, பீர்க்கை போன்ற நாட்டுக் காய்கள், கொலஸ்ட்ராலை கரைப்பதுடன், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன
வெள்ளரிக்காய் முதல் புடலங்காய் வரை பல்வேறு காய்கறிகளும் கொழுப்பைக் கட்டுப்படுத்தும் அருமருந்தாய் செயல்படுகின்றன
பொறுப்பு துறப்பு: இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை