ரிலையன்ஸ் ஜியோ.... குறைந்த கட்டணத்தில் தினம் 2GB டேட்டா.... இன்னும் பல நன்மைகள்

Sun, 01 Sep 2024-2:49 pm,

Cheap and Best Reliance Jio Prepaid plans: முன்னணி தனியார் தொல்லை தொடர்பு நிறுவனமான  ரிலையன்ஸ் ஜியோ, மலிவான திட்டங்களை அறிவிப்பதில் புகழ்பெற்றது. எனவே அதற்கென, வாடிக்கையாளர்கள் அதிகம் இருந்தனர்.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சென்ற மாதம் செல்போன் கட்டணங்களை உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், அரசு தொலை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பக்கம் பலர் சாயத் தொடங்கினர்.

பிஎஸ்என்எல் நிறுவனமும், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்போது, தனது 4ஜி நெட்வொர்க்கை விரிவு படுத்துவதுடன், மலிவான திட்டங்களை அறிவித்து வருகிறது.

 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இப்போது மலிவான திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சில பிரபலமான நான்கு குறிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்

 

ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்டு திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால் வசதியும், தினம் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். அதோடு ஜியோ டிவி ஜியோ சினிமா ஜியோ கிளவுட் சலுகைகளும் கிடைக்கும்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.629 ப்ரீபெய்டு திட்டம்: 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால் வசதியும், தினம் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். அதோடு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் சலுகைகளும் கிடைக்கும்.

 

ஜியோ நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்டு திட்டம்: 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால் வசதியும், தினம் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். அதோடு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் சலுகைகளும் கிடைக்கும்.

 

ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்டு திட்டம்: 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால் வசதியும், தினம் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். அதோடு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் சலுகைகளும் கிடைக்கும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link