தினசரி 3 கப் பிளாக் காபி குடித்தால் உடலில் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?
தொடர்ந்து காபி குடிப்பவர்கள் அல்லது காஃபின் உட்கொள்பவர்களுக்கு இதயம் மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிதமான அளவில் காபி குடிப்பதால் டைப் 2 நீரிழிவு நோய், இதயப் பிரச்சனைகள் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
தொடர்ந்து காபி குடித்து வருபவர்களுக்கு இதயம் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் குறைவு என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. கார்டியோமெடபாலிக் நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
கார்டியோமெடபாலிக் நோய்கள் என்பது இதயத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு ஆகும். மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் கல்லீரலில் அதிக கொழுப்பு இருப்பது இதில் அடங்கும்.
ஒரு நபர் தினமும் மூன்று கப் காபி குடித்தால் அல்லது சிறிது காஃபின் எடுத்து கொண்டால், அது அவர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், இதயம் அல்லது சர்க்கரை பிரச்சனைகளால் நோய்வாய்ப்படாமல் இருக்கவும் உதவும்.
காபி, டீ அல்லது காஃபின் குடிப்பது உங்கள் இதயத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இருப்பினும், அவை மற்ற வகையான நோய்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)