ரோஹித் சர்மாவுக்கு இந்த நடிகை மீது தான் Crush... யார் தெரியுமா?

Fri, 05 Jul 2024-1:44 pm,

ரோஹித் சர்மா கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் அறிமுகமானார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 அரங்கிலும் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்டராக திகழ்கிறார். 

 

2007 டி20 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட கோப்பைகளை இந்திய அணி கைப்பற்றிய போது ரோஹித் சர்மாவும் அந்த ஸ்குவாடில் இடம்பெற்றிருந்தார். 

 

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்தி வரும் ரோஹித் சர்மா தற்போது இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றியது. 

 

டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய கையோடு சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர்வார் எனலாம். 

 

அடுத்தாண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய ஐசிசி தொடர்கள் உள்ளதால் அவற்றையும் கைப்பற்ற ரோஹித் சர்மா பெரிய பிளான் வைத்திருக்கிறார் எனலாம். 

 

கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் நீடிக்கும் ரோஹித் சர்மாவால் ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்றும் ராசி மட்டும் இல்லாமல் போய்விட்டது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய அணியில் ரோஹித் இடம்பெறவில்லை. அதன்பின் நடைபெற்ற 2015 மற்றும் 2019 தொடர்களில் அரையிறுதியிலேயே இந்தியா வெளியேறிவிட்டது. 

 

இருப்பினும் ரோஹித் சர்மா தலைமையில் 2023 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் தோல்விக்கூட பெறாமல் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. தற்போது 37 வயதான ரோஹித் சர்மா 2027 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது கடினம்.

 

ரோஹித் சர்மா பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நாயகனாக உள்ள நிலையில், அவர் குறித்த தனிப்பட்ட தகவல்களை தெரிந்துகொள்ளவும் பலர் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன் FlimFare-க்கு அளித்த பேட்டியில் ரோஹித் சர்மா தனக்கு பிடித்த நடிகை கரீனா கபூர் என தெரிவித்திருந்தார். அவர் அந்த பேட்டியில்,"எனக்கு கரீனாவை மிகவும் பிடிக்கும், அவர் மிகவும் அழகானவர். அவரின் அனைத்து படங்களையும் நாம் பார்த்துவிடுவேன்" என்றார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link