Mango: ஆண்மையை அதிகரிக்கும் முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் நன்மைகள்
விட்டமின் சி நிறைந்த பழம் மாம்பழம்.
100 கிராம் மாம்பழத்தில் நீர்ச்சத்து, 76 கிராம் நார்ச்சத்து, 0.6 கிராம் தாதுப்பொருட்கள், 0.4 கிராம் கொழுப்பு, 0.4 கிராம் புரதம் ஆகியவை இருக்கின்றன.
மாவுப் பொருள் 0.5 கிராம், 17 கிராம் சுண்ணாம்புச் சத்து, 13 மில்லி கிராம் இரும்புச்சத்து, 1.2 மில்லி கிராம் கரோட்டின், 72 கலோரி தையமின், 0.8 மில்லி கிராம் நியாசின் ஆகியவையும் 100 கிராம் மாம்பழத்தில் இருக்கின்றன.
உடலில் ரத்த உற்பத்திக்கு மாம்பழங்கள் வரப்பிரசாதம். நமது உடலில் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டே இருந்தால் தான், உடல் வளர்ச்சியடையும், ஆரோக்கியமாக இருக்கும். அதனால் தான் பருவக்கால ப்ழமாக இருந்தாலும், மாங்காயை ஊறுகாயாக போட்டு, ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் பழக்கம் இந்தி்யாவில் தொன்றுதொட்டு இருந்து் வருகிறது.
மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், புற்று நோய் மற்றும் வயது மூப்பு போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும், உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது.
ஆண்மையை அதிகரிப்பதோடு, அனைவரின் மனச்சோர்வை நீக்கும் திறன் கொண்டது மாம்பழம்.