SBI Offer: 50 முதல் 80 சதவீதம் தள்ளுபடி வேண்டுமா? இதோ Tips
உங்களிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அட்டை இருக்கிறதா? இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி உங்களுக்காக சில அற்புதமான சலுகைகளை வழங்குகிறது.
lifestylesstore.com உடன் கைகோர்க்கும் எஸ்.பி.ஐ எஸ்.பி.ஐ வங்கி (SBI Bank) சில்லறை பொருட்களை விற்பனை செய்யும் lifestylesstore.com என்ற சங்கிலித் தொடர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த சலுகை YONO செயலியின் (YONO App) மூலம் பணம் செலுத்தும்போது இந்த சலுகைகளைப் பெறலாம்.
இதுபோன்ற ஆண்டு இறுதி சலுகைகளை அதிகம் பெற்று மகிழலாம்
எஸ்பிஐ வங்கியின் YONO செயலியின் மூலம் லைஃப்ஸ்டைல் ஸ்டோர்ஸ்.காமில் (lifestylesstore.com) நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது, குறைந்தபட்சம் ரூ .1999 வாங்கினால் கூடுதலாக 15% தள்ளுபடி பெறலாம். அதேபோல், குறைந்தபட்சம் 10,000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கும்போது, 30% தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை எஸ்பிஐ YONO செயலியில் மட்டுமே கிடைக்கும். அதோடு, தள்ளுபடியைப் பெறுவதற்கு வங்கி கொடுத்த குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.
7500 பேர் வங்கியில் பணியமர்த்தப்படுவார்கள் "எஸ்பிஐ மகிழ்ச்சியை பரப்புகிறது!" 7500 புதிய ஜூனியர் அசோசியேட்டுகளை #SBIFamily க்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். 214 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு உங்களை வரவேற்கிறோம். உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . மேலும் தகவலுக்கு, பாருங்கள்: https://bit.ly/3heHh0O #StateBankOfIndia
சமூக ஊடகங்களில் ட்விட்டர் மூலம் பிரபலமானது
வங்கியின் ட்விட்டர் பதிவுகள் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது, வங்கியின் அதன் திட்டங்கள், பாதுகாப்பான வங்கி உதவிக்குறிப்புகள் மற்றும் பிற வங்கித் தகவல்களைப் பற்றி எஸ்.பி.ஐ வங்கி தினமும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியே தங்கள் சேவைகளின் அடிப்படை நோக்கம் என்கிறது எஸ்.பி.ஐ வங்கி