ஒரு பெண், ஜிகிரி தோஸ்துகளாக இருக்கும் இரு நண்பர்களை பிரிக்க முடியுமா?
குழந்தை பருவம் முதல் ஜிகிரி தோஸ்துகளாக இருக்கும் நண்பர்கள் திருமண பருவத்தை எட்டியவுடன் பிரிய வேண்டிய சூழல் வருமா என்றால் வரும். இதற்கு இருக்கும் பல காரணங்களில் காதலியும் ஒரு காரணமாக அமைவார்.
பதின் பருவம் வந்ததும் இளைஞர்கள் பொதுவாக தனக்கு பிடித்த பெண்களிடம் கமிட்டாகிவிடுவார்கள். அப்போது நண்பர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போதும் கொடுக்க முடியுமா? என்றால் முடியாது.
நண்பர்கள், காதலி என இருதுருவ சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். புரிதல் இருந்தால் கூட சில சமயங்களில் யார் முக்கியம் என்ற சூழல் எழும்போது இளைஞர்கள் காதலியையே தேர்வு செய்வார்கள்.
காரணம் குழந்தை பருவத்தில் இருந்து ஒன்றாக இருக்கும் நண்பனை எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம். அவனுக்கு சூழலை புரிய வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான்.
காதலியை குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க முடியவில்லை என்றால் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் இளைஞர்கள், நண்பர்களிடத்தில் கமிட்மென்ட் கொடுத்திருந்தாலும் கடைசி நேரத்தில் கேன்சல் கூட செய்து கொள்வார்கள்
வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கு நகரும்போது நண்பர்களைக் காட்டிலும் தன்னுடன் வாழப்போகும் காதலிக்கே இளைஞர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த நேரத்தில் நண்பன் இப்போது முன்பு மாதிரி இல்லை என்றெல்லாம் சோகக்கதை பாடிக் கொண்டிருக்காமல் எதார்த்ததை புரிந்து நகர வேண்டியது மட்டுமே மற்றொரு நண்பனுக்கு இருக்கும் ஆப்சன்.
திருமணம் முடிந்த பிறகு பழைய நண்பர்களையும், பால்ய நட்பு நண்பர்களையும் சில சமயங்களில் ஒன்றுகூடி சந்தித்துக் கொள்வது மட்டுமே எதார்த்தமான வாழ்க்கை. சிலருக்கு மட்டும் நண்பர்கள் எல்லா தருணத்திலும் உடன் இருப்பது அமையும்.
எல்லோருக்கும் அமையுமா? என்றால் அதற்கான பதில் இல்லை. நண்பர்களை பிரிப்பதில் பெண்கள் குற்றவாளிகளா என்றால் அதுவும் இல்லை. அவர்கள் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்தில் தங்களுக்காக எடுக்கும் சில முடிவுகள் நண்பர்களுடன் நேரம் செலவிடமுடியாமல் போக வாய்ப்பு இருக்கிறது.
எனவே, பெண்களும் குற்றவாளிகள் அல்ல, நண்பர்களும் பாதிக்கபட்டவர்கள் அல்ல. உங்களின் சூழலுக்கு ஏற்ப முடிவெடுத்து நட்பை தொடருவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சாமார்த்திய குணாதிசயமே.