மூவா இறவா மொழியென்றால் அது தமிழே! தமிழ் மொழியைப் போன்ற உலகின் 5 பழம் மொழிகள்!
மொழிகள் என்பவை மனித வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தகவல் தொடர்புக்கு பயன்படும் மொழிகள் நாகரீகத்தையும் அடையாளப்படுத்துகிறது. ஒரு மொழி எவ்வளவு பழமையானது என்பதைக் கண்டறிவது சவாலையும் சர்ச்சைஅக்ளையும் ஏற்படுத்துகிறது
மொழியின் வயதை எப்படி நிர்ணயிப்பது? மொழியியலாளர்கள் இதை எப்படி தீர்மானிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
அதற்கு முன்னதாக, எழுத்து வடிவம் இல்லாத மொழிகளும் நீண்ட காலமாக பேசப்பட்டால், அவை பழமையான மொழிகள் என்ற பட்டியலில் இடம் பெறுமா இல்லை பெறாதா என்ற கேள்விகளும் எழுகின்றன
செம்மையான மொழியான தமிழ், இன்றும் பயன்பாட்டில் உள்ள பழமையான செம்மொழிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. நீண்ட நெடுங்காலமாக எழுத்து வடிவத்தையும் பேச்சுவழக்கிலும் இருக்கும் புழக்க மொழியாக இருக்கும் மொழி தமிழ்...
மத்தியதரைக் கடலில் பொதுவாகப் பேசப்படும் மொழி கிரேக்க மொழி. தற்காலத்தில் இந்த மொழி, சுமார் 13 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. கிரேக்க நாடு மற்றும் சைப்ரஸின் அதிகாரப்பூர்வ மொழியான கிரேக்க மொழி, அல்பேனியா, ஆர்மீனியா, உக்ரைன், ருமேனியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் உள்ள சில பிராந்தியங்களில் பேசப்படுகிறது
ஹீப்ரு பைபிளின் மொழி, யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித மொழியாகக் கருதப்படும் ஹீப்ரு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் புத்துயிர் பெற்றிருந்தாலும் பல நூற்றாண்டுகளாக பேச்சு மொழியாக இல்லாமல் இருந்தது. தற்போது, உலகில் ஹீப்ரு சுமார் 9 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது, நவீன ஹீப்ரு இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. யூத மற்றும் சமாரியன் சமூகங்களில் மதம் மற்றும் இலக்கிய நோக்கங்களுக்காக உலகம் முழுவதும் ஹீப்ரு மொழியின் பழைய பதிப்பு பயன்படுத்தப்படுகிறது
உலகில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட மிகப் பழமையான மொழி சீன மொழி. சீன மொழி என்பது ஒரு மொழி அல்ல, ஆனால் பொதுவான எழுத்து முறையைப் பகிர்ந்து கொள்ளும் தொடர்புடைய மொழிகளின் குழு என்பது குறிப்பிடத்தக்கது. சீன மொழியில் மிகவும் பரவலாகப் பேசப்படும் வகை மாண்டரின் என்பதும், 3,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது சீன மொழி என்பதும் குறிப்பிடத்தக்கது
சமஸ்கிருதம் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றானது, இந்தியாவின் இரண்டு மாநிலங்களின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. பிரம்மாவால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் சமஸ்கிருதத்தை அவர் ரிஷிகளுடன் பகிர்ந்து கொண்டார் என்றும், அவர்கள் மூலமாக பூமியில் வாழும் மக்களுக்கு பரவியது என்பதும் நம்பிக்கை.
பல மொழிகளின் வரலாறு, பாரம்பரியமானவை சில மொழிகள் காலப்போக்கில் உருவாகி அழிந்தும் போகின்றன. பேச்சு மற்றும் கட்டமைக்கப்பட்ட மொழி என்பது 10,000 ஆண்டுகள் பழமை வாயந்ததாக நம்பப்படுகிறது