தண்ணீர் குறைவாக குடித்தால் இவ்வளவு பக்க விளைவா?
நீங்கள் போதுமான தண்ணீர் குடிக்கவில்லையென்றால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதோடு, மிதமானது முதல் கடுமையான வயிற்று வலி ஏற்படும்.
தண்ணீர் அதிகம் குடித்தால் தான் உமிழ்நீர் நன்றாக சுரக்கும், அப்படி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உமிழ்நீர் சுரப்பில் குறைப்பது ஏற்பட்டு உணவை விழுங்கவதில், பேசுவதில் விடுவதில் சிரமம் ஏற்படும்.
பசிக்கிறதா அல்லது தாகம் எடுக்கிறதா என்கிற குழப்பம் குறைவாக தண்ணீர் அருந்துபவர்களிடையே ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அதிகளவு உணவை உட்கொள்ள நேரிடும் இதனால் உடல் எடையும் அதிகரித்துவிடும்.
குறைவான அளவு தண்ணீர் குடித்தால் அடிக்கடி தலைவலி ஏற்பட்டு உங்களது வேலையை பாதிக்கும், அதிகமாக தலைவலிக்கும்போது ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்தால் வலியிலிருந்து விடுபடலாம்.