சனிபகவானும் ஷஷ ராஜயோகமும்... இந்த ராசிகளை 2025 மார்ச் வரை பிடிக்கவே முடியாது
சனீஸ்வரன்: நீதிக் கடவுள் என கருதப்படும் சனி பகவான் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாற 2 1/2 வருடம் ஆகும். எனவே சனி பகவான் தனது இயக்கத்தை மாற்றும் போது, மீண்டும் அதே ராசிக்கு திரும்ப 30 ஆண்டுகள் ஆகும். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ள நிலையில், மார்ச் 2025 வரை அங்கேயே இருப்பார். அதன் பின் மீனத்திற்கு செல்வார்.
சனி பகவானும் ஷஷ ராஜயோகமும்: கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் ஷஷ ராஜ யோகம் உருவாகியுள்ள நிலையில், குறிப்பிட்ட சில ராசிகள், செல்வம், மகிழ்ச்சி, நிம்மதி கௌரவம், உயர் பதவிகள் ஆகியவற்றை அடைந்து வாழ்க்கையில் மிக நல்ல நிலையை அடைவார்கள். அரிய பஞ்ச மகா புருஷ யோகம் எனப்படும் ஷஷ ராஜயோகத்தினால் பலன் பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
ரிஷபம்: கை வைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டில் தொழில் செய்ய வேண்டும் என்ற கனவு நனவாகும். வேலையில், தொழிலில் இருப்பவர்களுக்கு பண வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலை தேடுபவர்கள் வெற்றி பெறலாம்.
கன்னி: உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடக்கும். முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு பதவி உயர்வும், சமூகத்தில் மரியாதையும் கூடும். எடுக்கும் முயர்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும். பண வரவிற்கு குறைவிருக்காது.
விருச்சிகம்: சனி பகவானின் அருளால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வுடன் கூடிய பலனைப் பெறலாம். முதலீடு செய்வது பலனளிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பணத்திற்கு தட்டுபாடு என்பதே இருக்காது.
கும்பம்: 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கும்பத்தில் சனியின் சஞ்சார்ரம் காரணமாக உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். பொருள் வசதிகள் கூடும். நிதி நன்மைகள் சிறப்பாக இருக்கும். கடன்களை அடைத்து நிம்மதியான வாழ்வைப் பெறுவீர்கள்.
சனி பரிகரங்கள்: சனி பகவானின் அருளை பரிபூரண்மாக பெற ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். வாழ்க்கையில் வாடி நிற்பவர்களுக்கு உதவி செய்பவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். இதை தவிர சனி சாலிசா பாராயணம் செய்வதும் பலன் தரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.