சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்: இவர்களை கைவிட மாட்டார், எப்போதுமே அருள் மழை பொழிவார்
ரிஷபம்: ரிஷபம் சுக்கிரனால் ஆளப்படும் கிரகம் மற்றும் சனியின் நட்பு கிரகமாகும். இதன் பலனாக சனி பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தருவார். சுக்கிரனின் நிலை மற்றும் சனி தேவரின் ஆசீர்வாதத்துடன் அதிகபட்ச வெற்றி, செழிப்பு, புகழ், ஆன்மீகம் மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி கிரகத்தின் ஆசீர்வாதம் எப்போதுமே இருக்கும், இதனால் பிரச்சனைகளை நீங்கள் குறைவாகவே எதிர்கொள்வீர்கள். கடக ராசிக்காரர்கள் கலை, எழுத்து, பத்திரிகை மற்றும் அரசு வேலைகள் போன்றவற்றில் மகத்தான வெற்றி, மரியாதை மற்றும் செல்வத்தைப் பெறுவார்கள். ஏழரை சனி, சனி தசை உங்களுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது.
துலாம்: துலாம் சனியின் உயர்ந்த ராசிகளில் ஒன்றாகும் மற்றும் சனி எப்போதும் துலாம் ராசியில் உயர்ந்த நிலையில் தான் இருப்பார். துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் சிறப்பு ஆசியும், அருளும் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றி, செல்வம், புகழ் மற்றும் மகிழ்ச்சியைத் தருவார் சனி.
மகரம்: மகர ராசியின் அதிபதி சனி. மகர ராசிக்காரர்களுக்கு சனியின் பாதகமான பாதிப்புகள் குறைவு. மகர ராசிக்காரர்கள் வலுவான பகுத்தறிவு மற்றும் தலைமைப் பண்புகளைக் கொண்டுள்ளனர் மற்றும் சனியின் அருளால், பணியிடத்தில், வியாபாரத்தில் அல்லது அரசியலில் முன்னேற்றும் அடைவீர்கள்.
கும்பம்: கும்ப ராசிக்கு அதிபதியாக சனி ஆவார், எனவே இந்த ராசிகளின் மீது சனியின் ஆசீர்வாதம் எப்போதும் உச்சமாக இருக்கும். சனி பகவானின் அருளால், கும்ப ராசிக்காரர்கள் செல்வம் மற்றும் புகழின் பற்றாக்குறையை எப்போதுமே அனுபவிக்க மாட்டார்கள். கடின உழைப்பால் பெரிய அளவில் வெற்றி, புகழ், அன்பு மற்றும் மரியாதை கிடைக்கும்.
சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை துதிக்கலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.