புத்திசாலிகளிடம் இருக்கும் மோசமான சமூகத்திறன்களை கொண்ட பொதுவான 7 நடத்தைகள்!
புத்திசாலிகளுக்கு அன்றாட உரையாடல்களில் சிக்கல்கள் நிகழ்கிறது. இது அவர்களின் உரையாடல்களில் சதுரங்க விளையாட்டாக அமைந்திருக்கிறது.
பொதுவாக ஓய்வெடுக்கும் நேரத்தில் அல்லது நண்பர்கள் உறவினர்கள் போன்றவருடன் மகிழ்ச்சியான பேச்சுக்களில் ஈடுபடுவது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. மேலும் மகிழ்ச்சியான பேச்சுக்களில் அவர்களின் கவனத்தை ஈர்த்த பேச்சுக்களை உள்ளே நுழைக்க முயல்வார்கள்.
அதிக புத்திசாலிகள் மற்றவர்களுடன் பழகுவதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் தனிமையில் இருக்க ஆசைப்படுவார்கள். இதனால் அவர்களுக்குக் குறைந்த வாழ்க்கை திருப்தி அளிக்கிறது.
சில நேர்மையான நடத்தைகள் அவர்களை மற்ற நபர்கள் மூலம் காயமடையச் செய்கிறார்கள். உண்மை, துல்லியம் போன்றவற்றை மதிப்பதால் நேர்மையற்றவர்களைத் தவிர்க்கின்றனர்.
அதிக புத்திசாலிகள் அவர்களின் உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதில் மிகவும் சிரமத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், இவர்கள் மற்றவர்களிடம் நேரம் செலவிடுவது மிகக் குறைவு என்பதால் தன்னுடைய கஷ்டங்களைப் பகிர்வதில் சிரமத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
அதிக புத்திசாலிகள் அவர்களுக்கென்று ஒரு நோக்கத்தை வைத்திருப்பார்கள். அதைத் தவிர வேறு எதிலும் ஈடுபாடு காட்ட மாட்டார்கள். எனவே மகிழ்ச்சியான நேரத்திலும் இவர்களின் ஈடுபாடு ஒதுங்கப்பட்டதாக உள்ளது என கூறப்படுகிறது.
அதிக புத்திசாலிகளிடம் எக்கச்சக்க கேள்விகள் நிறைந்திருக்கும். இது அவர்களின் ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். இதனால் சமூக விதி நடைமுறைகளில் பின்பற்றுவது அவர்களுக்குக் கடினம். கேள்விகள் இதிலும் அதிகம் கேட்கப்படுவதால் அவர்களுக்கு சமூக விதிகளில் உடன்பாடு இருக்காது என சொல்லப்படுகிறது.
இந்த குறிப்புகள் அனைத்தும் அவர்களின் குறைபாடுகள் அல்ல IQ திறன்கள் அவர்களிடம் அதிகம் நிறைந்துள்ளதால் கேள்விகள் பலவற்றை அவர்களின் புத்திக்குக் கேட்கத் தோன்றும் இன்று கூறப்படுகிறது. இது அவர்களை எதிர்மறையாக மாற்றுகிறது அல்லது வாழ்க்கைக்குச் சிலவற்றைச் சிரமங்களாக உணரச் செய்கிறது என சொல்லப்படுகிறது.