பர்ஸில் பணமே நிக்க மாட்டிக்குதா... இந்த 5 பழக்கவழக்கங்களை பின்பற்றினால் பணப் பிரச்னை ஓடிப்போகும்!
மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க வாழ்க்கையில் சில பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என சனாதன தர்மம் கூறுகிறது. ஆனால், இந்த பழக்கவழக்கங்கள் பலருக்கும் தெரிந்திருக்காது.
சனாதன தர்மம் கூறும் இந்த 5 பழக்கவழக்கங்களை பின்பற்றினால் உங்களின் பொருளாதார பிரச்னைகள் அனைத்தும் தீரும். அதாவது, இதில் தவறான பழக்கங்களை கைவிட வேண்டும், சில பழக்கவழக்கங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
இரவில் துவைக்காதீர்கள்: இரவில் துணிகளை துவைப்பது என்பது அசுபமான ஒன்றாக கருதப்படுகிறது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை வளர்க்கும் என கூறப்படுகிறது. எனவே, இரவில் துணி துவைக்காதீர்கள், பகற்பொழுதிலேயே துணிகளை துவைத்துக்கொள்ளுங்கள். இது உங்களை பிரச்னையில் இருந்து பாதுகாக்கும்.
இரவில் பணம் கொடுக்காதீர்கள்: விளக்கு வைத்த பின்னர், அதாவது இரவில் யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள், யாரிடமும் பணம் வாங்காதீர்கள் என கூறப்படுகிறது. இப்படி செய்தால் பொருளாதார இழப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது. எனவே, இதை செய்யாதீர்கள். இதன்மூலம், கடனமும், மன அழுத்தமும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
படுக்கையில் சாப்பிடுவது: தலையணியில் அமர்வது, உறங்கும் மெத்தை, பாய் ஆகியவற்றில் தூங்குவது என்பது அசுபமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது வீட்டில் வாஸ்து தோஷத்தை உண்டாக்கும் என நம்பப்படுகிறது, இது ஒட்டுமொத்த வாழ்வையும் பாதிக்கலாம். வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கலாம். எனவே இந்த பழக்கவழக்கத்தை கைவிடுங்கள்.
இரவில் வீட்டை துடைப்பது: துடைப்பம் லட்சுமி தேவியின் உருவமாக பார்க்கப்படுகிறது. எனவே அதனை இரவு நேரத்தில் பயன்படுத்துக்கூடாது என கூறப்படுகிறது. இரவில் வீட்டை துடைப்பத்தால் பெருக்கினால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி வீட்டில் உள்ள செல்வங்கள் மெதுவாக குறைய தொடங்கும்.
பாத்திரங்களை கழுவாமல் வைப்பது: சமையலறையில் பயன்படுத்திய பாத்திரங்களை கழுவாமல் இரவில் தூங்கச் செல்வது அசுபமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால், அன்னப்பூரணி தேவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். வீட்டில் செல்வமும், உணவும் குறைய தொடங்கும். எனவே தூங்கும் முன்னர் பாத்திரங்களை கழுவிவிடுங்கள்.
பொறுப்பு துறப்பு: வாசகர்களே, இது பொதுவான நம்பிக்கைகள் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் உறுதிசெய்யவில்லை.