விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும் ‘சில’ உணவுகள்... எச்சரிக்கையா இருங்க!
பாலியல் ஆரோக்கியம்: ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், அது தாம்பத்தியத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தந்தையாக வேண்டும் என்ற கனவு பொய்த்து போகும். சில உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பாலியல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.
விந்தணு குறைபாடு: ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மோசமாகப் பாதிக்கக்கூடிய சில உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை பற்றி அறிந்து கொள்ளது, பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
சோயா உணவுகளில், புரதம் அதிகமாக உள்ளதோடு, பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் அதிகம் உள்ளன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சோடா பானங்களை குடிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது மட்டுமின்றி விந்தணுக்களின் இயக்கமும் குறைகிறது. மேலும், இது விந்தணுவின் டிஎன்ஏவையும் சேதப்படுத்துகிறது. எனவே சோடா பானங்களில் இருந்து விலகி இருக்கவும்.
கேன்கள் மற்றும் டின்களில் அடைக்கப்பட்டு பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளில் பிஸ்பெனால் என்ற பொருள் உள்ளது, இது விந்தணு ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவையும் பாதிக்கும். எனவே, முடிந்தவரை பேக் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் உணவுகளில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.
புகைபிடித்தல் -மது அருந்துதல்: இன்றைய இளைஞர்கள், பலருக்கு சிகரெட் மற்றும் ஆல்கஹால் பழக்கம் உள்ளது, சிகரெட் மற்றும் மது அளவிற்கு அதிகமானால், அது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், விந்தணு எண்ணிக்கையும் தரமும் குறையும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறூப்பேற்காது