தீராத அசிடிட்டி, நெஞ்செரிச்சல் பிரச்சனையா... இந்த உணவுகள் கைகொடுக்கும்!
அகத்தை சீராக்கும் சீரகம், செரிமானத்தை வலுவாக்கும் மிகச் சிறந்த மசாலா. சீரகத்தை மென்று சாப்பிடுவதாலும், சீரகத் தண்ணீரை குடிப்பதாலும், அனைத்து விதமான செரிமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நெல்லிக்காய், செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து. நெல்லிக்காயை கருப்பு உப்பை தடவி சாப்பிடுவதும், நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதும், நல்ல பலன் கொடுக்கும்.
தீராத ஆசிடிட்டி தொல்லை இருப்பவர்கள், நன்கு பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுவது நிவாரணத்தை கொடுக்கும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் நார் சத்துகளும், ஆசிடிட்டி பிரச்சனையை போக்க உதவும்.
செரிமான பிரச்சனைகளுக்கு வெல்லம் மிகச்சிறந்தது. வட இந்தியாவில், உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கும். இதனால் செரிமான பிரச்சனைகளை தடுக்கலாம் என்பதே, இந்த பழக்கத்திற்கான காரணம்.
ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துளசியில், பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன, துளசி இலையை மென்று சாப்பிடுவதும், துளசி டீ அருந்துவதும், செரிமான பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.