இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
கேரட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தை சுத்திகரிப்பதோடு, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது.
தானியங்களுக்குப் பதிலாக பார்லியை சேர்த்துக் கொள்வதும் மிகவும் பலன் தரும். இதற்குக் காரணம் ரு முழு தானியம். இதை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமடைவதோடு, அதிகப்படியான கொழுப்பும் நீங்குகிறது.
இதய தமனிகளில் உள்ள கொலஸ்ட்ராலை சுத்தம் செய்ய, காலை உணவில் ஓட்ஸை உட்கொள்ளத் தொடங்குங்கள். இது நரம்புகளில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
பூண்டு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இதில் உள்ள அல்லிசின் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் நரம்புகளில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலை சுத்தம் செய்கிறது. பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்த உறைதலை தடுக்கும் குணங்கள் இருப்பதால், இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்.
தக்காளியில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ரத்த ஓட்டத்தை சீராக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் தக்காளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.