வெயிட் லாஸ் முதல் மலச்சிக்கல் வரை ... பப்பாளி விதையை தூக்கி எறியாதீங்க..!!
பப்பாளியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பலருக்குத் தெரியும். எனினும், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ள பப்பாளி விதை உடல் பருமன் முதல் சர்க்கரை நோய் வரையிலான பிரச்சனைகளை மிக எளிதாக கட்டுப்படுத்த உதவும் என்பது பலருக்கு தெரியாது.
உங்கள் எடை குறைய உணவில் பப்பாளி விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளி விதையில் உள்ள அதிக நார்ச்சத்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், வயிறு நிறைந்த உணர்வைத் தரும் நீண்ட நேரம் பசி எடுக்காது.
செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் நீங்க பப்பாளி மட்டுமல்ல, அதன் விதைகளும் நன்மை பயக்கும். பப்பாளி விதையில் இருக்கும் மலமிளக்கியான பண்புகள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன. இது தவிர, பப்பாளி விதையில் உள்ள பாப்பைன் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் நொதிகள் செரிமான அமைப்பை பலப்படுத்துகின்றன
பப்பாளி விதையில் உள்ள கார்பீன் என்ற தனிமம் குடலில் உள்ள புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. மேலும், பப்பாளி விதைகளில் இருக்கும் புரோட்டியோலிடிக் என்சைம்கள் குடலில் வாழும் பாக்டீரியாவைக் கொல்லும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
பப்பாளியை மட்டுமல்ல, அதன் விதைகளையும் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பப்பாளி விதையில் உள்ள நார்ச்சத்து காரணமாக, சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும். செரிமானத்தை மேம்படுத்துவதால், கணையம் இன்சுலின் உற்பத்தி செய்ய போதுமான நேரத்தைப் பெறுகிறது.
பப்பாளி விதைகள் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும். பப்பாளி விதைகளில் வைட்டமின் சி, ஆல்கலாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற பல சேர்மங்கள் உள்ளன. இந்த கலவைகள் அனைத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் மூட்டுவலிக்கு அருமருந்தாகும்.
பப்பாளி விதைகளை உட்கொள்ள, அதன் பொடியை ஸ்மூத்தி, ஜூஸ், கஞ்சி போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம். இது தவிர, இந்த சிறிதளவு பொடித்த விதைகளை காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் உட்கொள்ளலாம்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.