ஏழரை சனியால் அச்சமா? தாக்கத்தை குறைக்க இந்த எளிய பரிகாரங்கள் கண்டிப்பாக உதவும்
ஏழரைச் சனி நடக்கும் காலங்களில் பைரவரை வழிபடுவது அபரிமிதமான நன்மைகளை அள்ளிக்கொடுக்கும். அஷ்டமியில் பைரவரை கோயிலில் சென்று தரிசிக்கலாம். தினமும் பைரவர் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம்.
சனிக் கிழமைகளில் சனியின் காயத்திரி மந்திரத்தை சொல்லுவது, சனி சாலிசா சொல்வது நல்ல பலன்களை அளிக்கும். பூஜை அறையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தியானிப்பது நல்லது.
அரச மரத்தடியில் நீர் விட்டு, தீபம் ஏற்றி, மரத்தை சுற்றி வந்து வழிபடலாம். இதை தினமும் செய்யலாம் என்றாலும், சனிக்கிழமைகளில் செய்வது சிறப்பு நன்மைகளை அளிக்கும்.
ஏழை எளியவர்கள், தேவையில் இருப்பவர்கள் என இப்படிப்பட்ட நலிந்தோருக்கு செய்யும் உதவிகள் மூலம் சனி பகவான் எப்போதும் மகிழ்ச்சியடைகிறார். ஆகையால், முடிந்தபோதெல்லாம் தேவையில் உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்வது மிகுந்த நன்மை தரும்.
ஆஞ்சநேயரின் பக்தர்களை சனி பகவான் தொல்லைப்படுத்துவதில்லை. ஆகையால் ஏழரை சனி காலத்தில் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)