மாதவிடாய் சமயத்தில் ரத்தப்போக்கு கசிவதால் மன உளைச்சலா? இதை செய்தால் போதும்
மாதவிடாய் கசிவு பிரச்சனையைத் தவிர்க்க விங்ஸ் பேடைப் பயன்படுத்தவும். விங்ஸ் பேட்கள் உள்ளாடைகளில் ஒட்டிக்கொள்கின்றன, இது கறை பிரச்சனையையும் குறைக்கிறது. அதிகமாக ரத்தக்கசிவு இருக்கும்போது, அல்ட்ரா விங்ஸ் பேட் பயன்படுத்தப்பட வேண்டும்.
பல சமயங்களில் பெண்கள் சோம்பேறித்தனத்தில் மாதவிடாயை தடுக்கும் நாப்கின்களை மாற்றுவதில்லை. இதனால் ரத்தம் உள்ளாடைகளில் இருந்து வெளி ஆடைகளில் கசிந்துவிடுகிறது. 4 முதல் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின் மாற்றுவது அவசியமானது.
மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப் போக்கு இருந்தால், தற்போது அதற்காக விற்கப்படும் கப்களை கோப்பையைப் பயன்படுத்தலாம். ரப்பர் அல்லது சிலிகானால் செய்யப்பட்ட மாதவிடாய் கோப்பைகள், செலவையும் மிச்சப்படுத்தும்.
மாதவிடாய் ரத்தக் கசிவைத் தவிர்க்க துணிகளை பயன்படுத்த வேண்டாம். நாப்கின்கள் வருவதற்கு முன்னதாக பெண்கள் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். ரத்தக் கசிவு சிக்கல்களைத் தவிர்க்க மாதவிடாய் நேப்கின்களையே பயன்படுத்தவும்.
சிறிய சானிடரி நேப்கின்னாக இருந்தால், அது பிரச்சனையை ஏற்படுத்தும். நீண்ட மற்றும் தடித்த நாப்கின்களை பயன்படுத்தினால் மாதவிடாய் கசிவு பிரச்சனை குறையும்