இஞ்சி - சுக்கு: உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பது எது
இஞ்சியுடன் ஒப்பிடும்போது சுக்கு ஜீரணிப்பதற்கு எளிதானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஞ்சி சளியை குணப்படுத்துவதில் சிறந்து தான் என்றாலும் சுக்கு உடலில் சூட்டை உண்டாக்கவும், சளியை குணப்படுத்தவும் நல்ல மருந்தாக செயல்படுகிறது.
அஜீரணம் வயிறு உப்புசம், வாய்வு தொல்லை போன்ற பல பிரச்சனைகளுக்கு இஞ்சி அருமையான நிவாரணம் அளிக்கும் என்றால் மிகையில்லை.
உலர்ந்த இஞ்சியான சுக்கு என்பது இஞ்சியை விட அதிக நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். சுக்கை மசாலாப் பொருளாகவோ மருந்தாகவோ அனைத்து பருவங்களிலும் பயன்படுத்தலாம்.
இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், உடல் மற்றும் மன சோர்வு விலகி புத்துணர்ச்சி தானாக வரும்.
பொதுவாக இஞ்சி - சுக்கு இரண்டுமே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து தான். நமது உடலி உள்ள பிரச்சனை மற்றும் உடலின் தேவைக்கு ஏற்ப இதனை உட்கொள்வது சிறந்த பலனைக் கொடுக்கும்.