சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களின் வருமானம் உயரும், ராஜ பொற்காலம்
மேஷம்: சுக்கிரனின் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். சிக்கிய பணத்தை திரும்பிப் பெறுவீர்கள். தாம்பத்திய வாழ்வில் இன்பங்களை பெறுவீர்கள்.
ரிஷபம்: சுக்கிரன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் மன உறுதி அதிகரிக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
சிம்மம்: சுக்கிரனின் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பணப் பலன் உண்டாகும். நிலுவையில் இருந்த பணத்தை திரும்பிப் பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
கன்னி: சுக்கிரனின் ராசி மாற்றத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு பண பலன் உண்டாகும். நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வாழ்கையில் இனிமையான தருணங்களை பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
கும்பம்: சுக்கிரன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெற்று வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். புதிதாக வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கலாம். தொழிலில் ஏற்றம் இருக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்குவீர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை