கும்பத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை: 2025 புத்தாண்டின் ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும், லாபம் பெருகும்

Fri, 22 Nov 2024-3:01 pm,

சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். 2025 மார்ச் 29 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. அவர் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். சுக்கிரனின் ராசி மாற்றம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 28 ஆம் தேதி நடக்க உள்ளது. சுக்கிரன் இரவு 11:48 மணிக்கு கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். இதன் காரணமாக கும்பத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை நடக்கும். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை நல்ல செய்திகளைத் தரும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். உங்கள் குடும்பத்துடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். இந்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

 

ரிஷபம்: கும்பத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை, ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். இந்த நேரத்தில், நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். அல்லது ஏற்கனவே உள்ள வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் சுக்கிரன் சனி சேர்க்கையால் அனுகூலமான நன்மைகளை பெறுவார்கள். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு கிடைக்கலாம். பழைய முதலீட்டில் இருந்து திடீரென்று பெரிய லாபத்தைப் பெறலாம். நிலுவையில் உள்ள உங்கள் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன், சனி சேர்க்கை நல்ல பலன்களை அளிக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறலாம். உங்கள் தந்தையின் சொத்திலிருந்து சில பெரிய நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். புதிய வேலைகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்கும்.

மகரம்: சுக்கிரன் சனி சேர்க்கை, மகர ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் முன்னேற புதிய வாய்ப்புகளை அளிக்கும். சுக்கிரனின் அனுகூலமான செல்வாக்கின் காரணமாக, உங்கள் மகிழ்ச்சி மற்றும் வசதிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வழிகளில் வருமானம் அதிகரிக்கும். இதனால் வங்கி இருப்பு அதிகரிக்கும். நிதி ஆதாயம் காரணமாக பணப் பற்றாக்குறை நீங்கும். உங்கள் செலவுகள் குறையாவிட்டாலும், நீங்கள் முன்பை விட அதிக பணத்தை சேமிக்க முடியும்.

கும்பம்: கும்பத்தில்தான் சுக்கிரனும் சனி பகவானும் ஒன்றாக சஞ்சரிப்பார்கள். இது உங்களுக்கு பொன்னான காலத்தை கொண்டு வரும். உங்களுக்கு தொழில் சார்ந்த புதிய உறவுகள் உருவாகி, வியாபாரம் விரிவடையும். திருமணத்திற்காக காத்திருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்கும். பொருளாதார நிலை வலுவடைந்து வருமானம் அதிகரிக்கும்.

சனி பகவானின் அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமா பாஸம், ரவிபுத்ரம் யமாக் ரஜம்; சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி ஸனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். இது தவிர ஏழை எளியவர்களுக்கு உதவும் நபர்களை சனி பகவான் காத்து ரஷிக்கிறார்.

 

சுக்கிரனின் பரிபூரண அருள் பெற, 'ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் ஸஹ ஶுக்ராய நம:' என்ற சுக்ர பீஜ் மந்திரத்தை தினமும் ஜபிக்கலாம். சுக்ரா மந்திரம் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கான தடைகளை அகற்றி வாழ்வில் அனைத்து வசதிகளையும் அளிக்கின்றது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link