வக்ர சுக்கிரனால் ஜாக்பாட் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள், ஆனால் சிலருக்கு நஷ்டம்
சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அவர் வாழ்க்கையில் இன்பங்களை அனைத்தையும் அனுபவிப்பார். அதனால் தான் ஜோதிடத்தில் சுக்கிரனின், பெயர்ச்சியானாலும் சரி, அதன் உதயம் அஸ்தமனம், நிலையில் மாற்றம் என அனைத்திற்கும் மிக முக்கிய இடம் உண்டு.
கடகத்தில் அக்டோபர் 2 வரை, இருக்கும் சுக்கிரன், சிலருக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கிறார்
சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல நாள் தொடங்கும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகளும் விலகும். மேலும், நிதி சிக்கல்களையும் எளிதில் சமாளிக்க முடியும். கடினமாக உழைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சுக்கிரன் சஞ்சாரம் பல நன்மைகளைத் தருவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலைமை மேம்படுவது மட்டுமல்லாமல், வணிகர்களும் அதிக லாபத்தைப் பெறுவார்கள். உடல்நலப் பிரச்சனைகளும் குறையும்.
சுக்கிரனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்கு பல நன்மைகளைத் தரும். பெரும் லாபம் பெறுவீர்கள். மேலும், வருமானம் அதிகரித்து செலவும் குறையும். ஆனால் கவனமாக இருக்க வேண்டும்.
சுக்கிரன் பிற்போக்கான நிலையில் அமைவது மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் நிலை நன்றாக இருக்கும் ஆனால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரம் செய்பவர்கள் பலன்களைப் பெறலாம். காதல் களைகட்டும் நேரம் இது
கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். அக்டோபர் இரண்டாம் தேதி வரை உங்கள் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும். மேலும் அவர்கள் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம். வேலைகளை எளிதாக செய்து முடிக்க முடியும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.