‘குட்நைட்’ பட இயக்குநருக்கு திருமணம்! மணப்பெண் யார்? வைரலாகும் போட்டோஸ்..

Mon, 17 Jun 2024-10:01 am,

குட் நைட் படத்தை இயக்கி பிரபலமானவர் விநாயக் சந்திரசேகரன். இவருக்கு திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. 

குறட்டை விடும் மனிதனின் வாழ்வில் அவன் சந்திக்கும் பிரச்சனைகளை வைத்து உருவாகிய படம் குட் நைட். இதில், மணிகண்டன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்திருப்பார். 

சிம்பிள் கதையை, காமெடி மற்றும் செண்டிமண்ட் கலந்து இப்படத்தில் சொல்லியிருப்பர். அதுவே இதன் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. கூடவே, ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும் ஹிட் அடித்தன. இந்த படத்தை, விநாயக் சந்திரசேகரன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருந்தார். 

படத்தை இயக்கியது மட்டுமன்றி, க்ளைமேக்ஸ் காட்சியில் ஆட்டோ ஓட்டுபவராக ஒரு சீனிலும் நடித்திருப்பார். 

குட் நைட் படம் மூலம் மிகவும் பிரபலமான இவர், அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

விநாயக் சந்திரசேகரனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவருக்கும், பிரியா என்பவருக்கும் திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. 

விநாயக் சந்திரசேகரனின் திருமணத்திற்கு நேரில் சென்று குட்நைட் படக்குழுவினர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இவர் திருமணம் செய்து கொண்ட பிரியா யார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

விநாயக் சந்திரசேகரனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link