சனி, புதன் உருவாக்கும் 2 பெரிய ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை
ஜூன் 17-ம் தேதி கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடையும் போது 3 ராசிக்காரர்களுக்கு சாதகமான ராஜயோகமான ஷஷ ராஜயோகத்தின் பலன் கிடைக்கும். சனி 111 நாட்களுக்கு வக்ர நிலையில் இருப்பார். அந்த 3 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிம்மம்: 30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இந்த ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். சொந்த தொழில் தொடங்குவீர்கள். ஆளுமை மற்றும் ஒட்டுமொத்த ஈர்ப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கான அறிகுறிகள் தென்படும். பொருளாதார நிலை மேம்படும். நல்லிணக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி மதிக்கப்படும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிலையின் முழு பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக சலுகைகள் கிடைப்பதுடன், சம்பள உயர்வு, பதவி உயர்வு கைகூடும். எதிர்பாராத வகையில் நிதி உதவி கிடைக்கும். இந்த காலம் ஆரோக்கியம் மற்றும் செழுமையுடன் வாழ மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இதனுடன் வருமானம் மற்றும் பொருளாதார பலன்களும் அதிகரிக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் ஷஷ ராஜ யோகத்தால் ராளமான செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் பலனைப் பெறலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள். மேற்படிப்புக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உள்ளது. நினைத்த வேலை கிடைக்கலாம். தொழில் ஆதாயம் கிடைக்கும்.
பத்ர ராஜயோகம்: ஜூன் மாத இறுதியில், புதன் கிரகம் தனது ராசியை மாற்றும். ஜூன் 24ல் மிதுன ராசியில் புதன் நுழைவதால் பத்ர மகாபுருஷ ராஜயோகம் உருவாகும். 3 ராசிகளுக்கு பத்ர மகாபுருஷ ராஜயோகத்தின் மகத்தான பலன்கள் கிடைக்கும்.
துலாம்: புதனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் கௌரவம் கூடும்.
கும்ப ராசிக்கு புதனின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. புதன் அதிர்ஷ்ட வீட்டில் சஞ்சரிப்பார். அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் இருக்கும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். காதல் உறவில் வெற்றி உண்டாகும்.
மீனத்தில் புதனின் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வாகனங்கள், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. நிலம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் லாபம் கிடைக்கும். இதனுடன் பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும்.