சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. நவம்பர் முதம் அனைத்திலும் நம்பர் 1

Tue, 18 Jul 2023-10:15 am,

கோள்களின் மாற்றம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும். சனி பகவானின் ராசி மாற்றங்களும் இயக்க மாற்றங்களும் ராசிகள் மீது அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். 

 

சனி வக்ர நிவர்த்தி: தற்போது வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான் நவம்பர் 4, 2023 சனிக்கிழமையன்று நள்ளிரவு 12.31 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். சனியின் வக்ர இயக்கம் சில ராசிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. வக்ர நிவர்த்தியின் தாக்கமும் குறிப்பிடும் வகையில் இருக்கும்.

ராசிகளில் தாக்கம்: சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலங்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம்: இந்த காலத்தில் பண வரவு சாதகமாக இருக்கும். அதிகப்படியான லாபம் கிடைக்கும். சனியின் வக்ர நிவர்த்தி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இக்காலகட்டத்தில் இவர்களின் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் நன்மைகள் கிடைக்கும். 

மிதுனம்: சனி வக்ர நிவர்த்தி மிதுன ராசிக்காரர்களுக்கு பல வித நற்பலன்களை அள்ளித் தரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். 

துலாம்: சனியின் வக்ர நிவர்த்தியால் துலாம் ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்பு கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும். 

தனுசு: சனி வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நற்செய்தியை அளிக்கும். இவர்களுக்கு வேலைத் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இத்தனை நாட்களாக வாட்டி வதைத்த உடல் ரீதியான பிரச்சனைகள் தற்போது விலகி ஓடும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link