அற்புதமான வாழ்க்கை, அமோக பலன்கள்: சுக்கிரன் உதயத்தால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்
சுக்கிரன்: சுக்கிரன் மிக முக்கியமான ஒரு கிரகமாக கருதப்படுகிறார். ஈர்ப்பு, செல்வம், மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், செல்வம், அன்பு ஆகியவற்றைக் கொடுக்கும் கிரகம் சுக்கிரன். சுக்கிரன் கிரகம் மகிழ்ச்சி, ஒளிமயமான வாழ்க்கை மற்றும் செழிப்புக்கான காரணியாகக் கருதப்படுகிறார்.
சுக்கிரன் மாற்றம்: சுக்கிரனின் ராசியில் மாற்றம் ஏற்படும்போதும் அல்லது சுக்கிரன் அமைவிடம் மாறும்போதும், சுக்கிரனில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும், அது ஜோதிடத்தில் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சுக்கிரன் அஸ்தமனம் எப்போது? சுக்கிரன் கடகத்தில் அஸ்தமன நிலையில் இருக்கிறார். 2023 ஆகஸ்ட் 19 அன்று சுக்கிரன் உதயமாக உள்ளார்.
ராசிகளில் தாக்கம்: சுக்கிரமனின் அஸ்தமன தாக்கத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரம் இவர்களுக்கு பொருளாதார நன்மைகளை கிடைக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் துணையுடன் அனைத்து வேலைகளும் நிறைவேறும்.
துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் சாதகமாக அமையும். துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். ஆகையால் அவர் இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தருவார். இவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் பெற வலுவான வாய்ப்புகள் உருவாக்கப்படும். நீங்கள் விரும்பிய பதவி, பணம் அல்லது வேலையை பெறலாம். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கலாம்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் அதிக பலன்களை அளிக்கும். சுக்கிரன் உதயமாவதால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் கூடும். பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைங்க்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.