பொற்காலம் ஆரம்பம்: செப்டம்பர் 4 முதல் குரு, சுக்கிரன் அருளால் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

Sat, 19 Aug 2023-1:15 pm,

குருவும் சுக்கிரனும்: செப்டம்பர் 4 ஆம் தேதி குரு பகவானும் சுக்கிரனும் தங்கள் இயக்கத்தை மாற்றவுள்ளன. அன்றைய தினம் சுக்கிரன் கடக ராசியில் வக்ர நிவர்த்தி அடைவார், குரு மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சியை மேற்கொள்வார். 

ராசிகளில் தாக்கம்: சுக்கிரன் மற்றும் குருவின் இயக்க மாற்றங்களால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். சில ராசிகளுக்கு இதனால் சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். 12 ராசிகளுக்கான ராசிபலனை இந்த பதிவில் காணலாம். 

 

மேஷம்: இந்த காலத்தில் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். மனம் அமைதியற்று இருக்கும். அதிக கோவத்தை குறைக்கவும். அலுவலகத்தில் வீண் விவாதத்தை தவிர்க்கவும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

ரிஷபம்: மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நம்பிக்கை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிக உழைப்பு இருக்கும். இடம் மாற வாய்ப்பு உண்டு. அதிக அலைச்சல் இருக்கும்.

 

மிதுனம்: மனம் கலங்கிக்கொண்டே இருக்கும். நம்பிக்கை குறைவு ஏற்படும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். தேவையில்லாத சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.

 

கடகம்: சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். கல்வி மற்றும் அறிவுசார் பணிகளில் ஈடுபடுவீர்கள். கல்விப் பணிகளுக்கு மகிழ்ச்சியான பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்: நம்பிக்கை நிறைந்திருக்கும், ஆனால் மனதில் எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்கவும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். நண்பரின் உதவியால் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி: மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கையும் நிறைந்திருக்கும். கல்விப் பணிகளுக்கு மகிழ்ச்சியான பலன் கிடைக்கும். வியாபாரம் மேம்படும், ஆனால் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். தொழில் விஷயமாக வெளியூர் பயணமும் செல்லலாம்.

துலாம்: சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். முன்னேற்றப் பாதை அமையும். வருமானம் அதிகரிக்கும். வாகன சுகம் கூடும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்: பேச்சில் இனிமை இருக்கும். நம்பிக்கையும் நிறைந்திருக்கும். வேலை நேர்காணல் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும். உயர் பதவியை அடைய முடியும். கடின உழைப்பு அதிகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு: மனம் கலங்கும். நம்பிக்கை குறைவு ஏற்படும். உரையாடலில் சமநிலையுடன் இருங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.

மகரம்: மனம் நிம்மதியாக இருக்கும். பேச்சில் நிதானமாக இருங்கள். உத்தியோகத்தில் இடம் மாற வாய்ப்பு உண்டு. அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்: நம்பிக்கை நிறைந்திருக்கும், ஆனால் பொறுமை குறையும். மன அமைதியைப் பேண முயற்சி செய்யுங்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கலை அல்லது இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்: தன்னம்பிக்கை குறையும். அமைதியாக இருந்து பொறுமையாக செயல்படுங்கள். தேவையில்லாத கோவம் வேண்டாம். சுகாதாரம் மேம்படும். பண வரவு இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link