Happy Birthday Arya: ஆர்யாவின் இந்த படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Mon, 11 Dec 2023-1:52 pm,

நான் கடவுள் (2009)

பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் நான் கடவுள். இந்த படத்தில் ஆர்யா ஒரு அகோரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக சிறந்த நடிகர் பிரிவில் பிலிம்பேர் விருது பெற்றார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் (2010)

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.  ஆர்யா மற்றும் சந்தானத்தின் காமெடியில் படம் முழுக்க பல காட்சிகள் சிறப்பாக அமைந்து இருக்கும்.

 

மதராசப்பட்டினம் (2010)

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் மதராசப்பட்டினம். 1940களின் பின்னணியில் கதை நடக்கிறது.  இப்படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். 

 

ராஜா ராணி (2013)

இயக்குனர் அட்லீ இயக்கிய முதல் படம் ராஜா ராணி. இந்த படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடித்து உள்ளனர்.  

 

சார்பட்டா பரம்பரை (2021)

பா ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. 1970 களில் நடக்கும் குத்துசண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படத்திற்காக ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link