காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித உடலில் உள்ள நீரின் அளவு 50-60 சதவீதம். நீர் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, சிறந்த டீடாக்ஸ் பானமாக செயல்படுகிறது. உடல் உள் உறுப்புகள் சுத்தமடைந்து, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும். இதனால், செரிமான அமைப்பை மேம்பட்டு, எடையைக் குறைக்க உதவுகிறது.
உடலில் நீரிழப்பு காரணமாக, சோர்வு ஏற்படுகிறது. சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம், இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலுக்கும் ஆற்றல் கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கலாம்.
மூளை திசுக்களில் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. நீரிழப்பு காரணமாக, உடலுடன் சேர்ந்து, மூளையும் மன அழுத்தத்தை உணர்கிறது. எனவே, வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், மன அழுத்தத்தை போக்கலாம். அதோடு, அவ்வப்போது தண்ணீர் குடிப்பதன் மூலம், டென்ஷனைக் குறைக்கலாம்.
நீர் சத்து பற்றாக்குறையால், கூந்தல் பொலிவை இழக்கும். நீர் சத்து பற்றாக்குறை முடியின் வறட்சி மற்றும் உயிரற்ற தன்மைக்கு முக்கிய காரணம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது முடியின் வறட்சியைப் போக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், வளர்சிதை மாற்ற விகிதம், அதாவது மெட்டபாலிஸம் அதிகரிக்கும். இதன் காரணமாக உங்கள் செரிமான அமைப்பு சிறப்பாக இருக்கும். மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.
காலையில் எழுந்தவுடன் உடனடியாக குறைந்தது 3 டம்ளர் குடிக்க வேண்டும். நீங்கள் தினமும் இந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். தண்ணீர் குடித்த 45 நிமிடங்களுக்குப் பிறகு காலை உணவை உட்கொள்ள வேண்டும்.