தினசரி இரவில் அரிசி உணவை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
அரிசி உணவை சாப்பிடுவது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று பலர் அதனை விரும்பி சாப்பிடுவதில்லை. அரிசி ஒரு ப்ரீபயாடிக் உணவு ஆகும். இது உடலில் உள்ள பல்வேறு வகையான நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறது.
அரிசியை கஞ்சி முதல் கீர் வரை அனைத்து வகைகளிலும் சாப்பிடலாம். பருப்பு, தயிர், நெய், இறைச்சி என பல வகை உணவுகளுடன் சமைத்து சாப்பிட முடியும்.
அரிசி உணவை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை நிச்சயமாக சாப்பிடலாம். அரிசிக்கும் வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
சிம்பிளான மற்றும் எளிதான இரவு உணவாக அரிசி உள்ளது. இது தூக்கத்திற்கு நல்ல வழிவகை செய்கிறது. மேலும் சிறந்த ஹார்மோன் சமநிலைக்கு வழிவகுக்கிறது. வயதானவர்களுக்கும், இளம் வயதினருக்கும் அரிசி உணவு கண்டிப்பாக தேவை.
சருமத்திற்கு நல்லது - அரிசி எப்போதும் சருமத்திற்கு நல்லது. இது தோலில் ஏற்படும் துளைகளை அகற்றும். மேலும் சேதமடையக்கூடிய முடி வளர்ச்சியைத் தக்கவைத்து மேம்படுத்த உதவுகிறது.