தலைவலி சட்டுனு மறைய... இந்த ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்கள்!
டார்க் சாக்லேட்: இதில் அதிக மேக்னீஷியம் இருப்பதால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
காளான்: காளான் போன்று riboflavin (b2) ஊட்டச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் சிறுகுடல் பிரச்னைகளை போக்கி, தலைவலிக்கும் நிவாரணமளிக்கும்.
காபி: கேஃப்பீன் அதிகமாக உள்ள காபிகளை குடிப்பது தலைவலிக்கு நிவாரணமளிக்கும்.
வாழைப்பழம்: இதிலும் மேக்னீஷியம் அதிகமாக உள்ளது. தலைவலியை போக்குவதுடன் உடலையைும் சுறுசுறுப்பாக்கும்.
தர்பூசணி: உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் தலைவலியை போக்கும். தர்பூசணியில் 92% நீர்ச்சத்து இருப்பதால், அது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.
ப்ரோக்கோலி: ஹார்மோன்கள் மாற்றம் கூட தலைவலியை உண்டாக்கும். எனவே, ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளை சாப்பிடுங்கள்
பெரீஸ்: ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்த இவற்றை சாப்பிட்டால் தலைவலி காணாமல் போகும்.