கண் பார்வையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள..‘இதை’ உண்ணுங்கள்!
நமக்கு என்ன நோய் வருகிறது என்பதையும், உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதையும், நாம் சாப்பிடும் உணவை வைத்தே தெரிந்து கொள்ளலாம். உடலை பத்திரமாக பார்த்துக்கொள்ள, நமது டயட்டில் சில ஹெல்தியான உணவுகளை வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடின் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் கண்களை பாதுகாக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் ஏராளமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நட்ஸ்:
பருப்பு வகைகள், நட்ஸ்கள் ஆகியவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்வதும் பார்வைக்கு நன்மை பயக்கும். குறிப்பாக சியா விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டுமாம். இதில், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 ஆகிய சத்துகள் இருக்கின்றனவாம்.
பச்சை காய்கறிகள்:
பச்சை இலை காய்கறிகள், உடலுக்கும் கண் பார்வைக்கும் நன்மை பயக்கின்றன. இதில், கண் பார்வைக்கு உகந்த லூடீன், ஜியாக்சாண்டின் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன.
மீன்:
கண் பார்வையை மேம்படுத்த உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று, மீன். இதில், ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் இருப்பதால், கண் பார்வைக்கு நன்மை பயக்குமாம்.
உலர் பழங்கள்:
நட்ஸ்களை போலவே, உலர் பழங்களும் உடலுக்கும் கண்களுக்கும் நன்மை பயக்கின்றன. இதில் உள்ள வைட்டமின் ஈ சத்துகள், வயதானாலும் கண் பார்வையை gun போல வைத்துக்கொள்ளுமாம். முந்திரி, வேர்க்கடலை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றில் கண் பார்வையை மேம்படுத்தும் சத்துகள் உள்ளன.
சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்களில், வைட்டமின் ஈ மற்றும் சி சத்துகள் இருக்கின்றன. குறிப்பாக, கண் பார்வையை பார்த்துக்கொள்ள எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கேரட்:
பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ சத்துகள் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று கேரட். இது, கண்களின் புரதங்களை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளுமாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)