மந்தமான மூளையை மாஸாக செயல்பட வைக்கும் 7 உணவுகள்!
மூளைக்கான உணவுகள்:
உடல் பாகங்கள் அனைத்தும் சரியாக செயல்படுவதற்கு காரணமாக இருப்பதே, மூளை மட்டும்தான். இதை சரியாக பராமரிக்க மற்றும் ஷார்ப்பாக வைத்துக்கொள்ள சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
முழு தானியங்கள்:
முழு தானியங்களில் வைட்டமின் ஈ சத்துகள் நிறைந்திருக்கின்றன. இதற்கு பிரவுன் அரிசி, பார்லி, ஓட்ஸ் உள்ளிட்டவற்றை இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
நட்ஸ் அண்ட் சீட்ஸ்:
நட்ஸ் மற்றும் பழ விதைகளை சாப்பிடுவது மூளையை சுறுசுறுப்பாக்க உதவும். இதில் வைட்டமின் ஈ சத்துகளும் இருக்கின்றன. சூர்யகாந்தி விதைகள், பாதாம், ஹேசல் நட்ஸ் ஆகிய விதைகளை சேர்க்கலாம்.
மீன்கள்:
நல்ல கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 சத்துகள் இருக்கிறது. சால்மன், மத்தி, நெத்திலி, ஹாலிபட், முரண் மீன்கள் ஆகியவை அடங்கும்.
டார்க் சாக்லேட்:
டார்க் சாக்லேட்டில், மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் உள்ளது 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருந்த ஒரு மருத்துவ ஆய்வில், மூளையை சுறுசுறுப்பாக்கும் திறன், இதில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
காஃபி:
பலர், தூக்கத்தை போக்குவதற்கு கஃபைன் குடித்து பார்த்திருப்போம். காஃபி, நினைவு திறனையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
பெர்ரி பழங்கள், மூளையின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளுள் ஒன்றாகும். இது, அழற்சியை ஏற்படுத்தும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
அவகேடோ:
அவகேடோவில் நல்ல கொழுப்பு எனப்படும் நிறைவுறா கொழுப்பு சத்துகள் இருக்கிறது. இது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், நினைவாற்றலை அதிகப்படுத்தவும் உதவுமாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)