இந்தியாவின் ஆடம்பரமான 5 ரயில்கள்

Thu, 03 Nov 2022-4:09 pm,

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்:

ராயல் ராஜஸ்தான் என்பது ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (RTDC) மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சியாகும். இந்த ரயிலில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆக்ரா, கஜுராஹோ மற்றும் வாரணாசி போன்ற இடங்களையும் ராஜஸ்தானின் அரண்மனை நகரங்கள் வழியாகவும் பயணிக்கும்

ராயல் ஓரியண்ட்:

1994-95ல் குஜராத் சுற்றுலா கழகம் மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சியாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருக்கும் பாரம்பரிய நகரங்களின் வழியே பயணிக்கிறது. இந்த ரயில் மூலம் டெல்லி, சித்தோர்கர், உதய்பூர், ஜுனகர், வெராவல், சோம்நாத், சாசன் கிர் தேசிய பூங்கா, அகமதுபூர், மாண்ட்வி, பாலிதானா, சர்கேஜ், அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற இடங்களுக்கு செல்லலாம்.

பேலஸ் ஆப் வீல்ஸ்:

உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் பயணத்தை வழங்கும் முதல் சொகுசு ரயில் இதுவாகும். இது ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில். அனைத்து வகையான நவீன வசதிகளும் இந்த ரயிலில் உள்ளன. 

மகாராஜா எக்ஸ்பிரஸ்:

மகாராஜா எக்ஸ்பிரஸ் ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்திய முதன்மை சொகுசு ரயில் ஆகும். டீலக்ஸ் கேபின்கள், ஜூனியர் சூட் கேபின்கள், சூட்கள் மற்றும் பிரசிடென்சியல் அறைகள் போன்ற வசதிகளை உள்ளடக்கிய 23 கேரேஜ்-நீள ரயில். இந்த ரயிலில் ரங் மஹால் மற்றும் மயூர் மஹால் எனப்படும் இரண்டு அற்புதமான உணவகங்கள் உள்ளன. முதலாவது செங்கோட்டையில் உள்ள அசல் ரங் மஹாலின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இரண்டாவது இந்தியாவின் தேசிய பறவையான மயிலை அடிப்படையாகக் கொண்டது. 

டெக்கான் ஒடிஸி: ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பயணிக்கும் சொகுசு ரயில். இது மகாராஷ்டிராவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. டெக்கான் ஒடிஸியில் நன்கு பொருத்தப்பட்ட டீலக்ஸ் கேபின்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய குளியலறைகள் கொண்ட சூட் கேபின்கள் இருக்கிறது. சலூன், பார் லவுஞ்ச், மினி ஜிம்னாசியம், கான்ஃபரன்ஸ் ஹால் மற்றும் ஆயுர்வேத ஸ்பா போன்ற சில கூடுதல் வசதிகளும் இருக்கின்றன. இந்த ரயிலில் பயணித்து இந்தியாவின் அரிய இடங்களை சொகுசாக நீங்கள் காணலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link