12 ராசிகளுக்கான பலன்: இன்று யாருக்கு நல்ல நாள்? இந்த ராசிகளுக்கு மன உளைச்சல் ஏற்படலாம்

Wed, 11 Sep 2024-12:07 pm,

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள். பணியிடத்தில் உற்சாகத்துடன் பணியாற்றுவீங்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது. (Image: Freepik)

கடின முயற்சி மூலம் நீங்கள் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் இருக்கக்கூடிய நாள் இன்று. முக்கியமான முடிவுகள் நன்மை அளிக்கும் வகையில இருக்கும்.  உங்களிடம் உறுதி மற்றும் நேர்மை காரணமாக உங்களுடைய பணிக்கு நல்ல பெயர் கிடைக்க வாய்ப்பு. கடன்கள் மூலம் சில பணவரவு இருக்கும். இதன் மூலம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.  (Image: Freepik)

இன்று பொதுவாக மகிழ்ச்சி காணக்கூடிய நாள். இன்றைய நாளை புதிய திட்டங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். பணியிடத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்க துணையிடத்தில் மனம் திறந்து பேசுவீர்கள். இதனால் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். யோகா மற்றும் தியானம் உங்களுக்கு உதவிகரமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.  (Image: Freepik)

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. சில சூழ்நிலைகள் உங்களுக்கு வருத்தத்தை உருவாக்கும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். பிரார்த்தனை மற்றும் வழிபாடு ஆறுதல் பெற்றுத்தரும். பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.  (Image: Freepik)

அறிவுபூர்வமாக செயலாற்றுவதன் மூலம் இன்று எழும் பிரச்சனைகளை  கையாள முடியும். இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்காது. பணிகள் அதிகமாக இருக்கும் என்பதால் முறையாக திட்டமிடுவது அவசியம். சிறிய விஷயத்தைக் கூட பெரிய இன்று பண பற்றாக்குறை இருக்கும்.  (Image: Freepik)

இன்று சிறப்பான நாளாக அமையும். கடினமான பணிகளை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.  சகஜமான அணுகுமுறை மூலம் நீங்க எளிதாக உங்களுடைய இலக்குகளை அடையலாம். பணியில் சிறந்த வெற்றி கிடைக்கக்கூடிய நாள். இன்று உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.  (Image: Freepik)

இன்று தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டிய நாள். தைரியமின்மை காரணமாகா பிரச்சனைகள் உருவாகலாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். பணிகளை மேற்கொள்ளும் பொழுது தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கவனமுடன் பணியாற்ற வேண்டும். உங்கள் மனதில் குழப்பம் ஏற்படும். உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது ரொம்பவே நல்லது.  (Image: Freepik)

ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் அளிக்கும். புத்திசாலித்தனமாக யோசிப்பது சிறந்த பலன்களை பெற்றுத் தரும். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். ஆன்மீக நோக்கத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள். (Image: Freepik)

எந்த ஒரு செயலையும் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்து செயல்பட வேண்டும். உங்களுடைய வார்த்தைகளில் கவனம் தேவை. மனதில் குழப்பம் வேண்டாம். உங்களுடைய பணிகளை திட்டமிட்டு முடிப்பீர்கள். மனக்குழப்பம் காரணமாக உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். கணவன் மனைவி இடையே விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. பண விரயம் காணப்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. கவனமாக செலவு செய்ய வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.  (Image: Freepik)

எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் உங்களுடைய மனதில் ஓடும். முக்கியமான செயல்களை செய்வதற்கு இன்றைய நாள் ஏற்ற நாளாக இருக்கும். பணிகளை எளிதாக நல்ல முறையில கையாளுவீர்கள். கணவன் மனைவி இடையே நட்பு அதிகரிக்கும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.  (Image: Freepik)

இன்றைய நாள் உங்களுக்கு சற்று மந்தமான நிலையில் காணப்படும். ஆன்மீக ஈடுபாடு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். புதிய பணிகளை நீங்க மேற்கொள்ளக்கூடிய நாள். உங்க துணையிடத்தில் கலந்து யோசித்து முடிவு எடுங்கள். இதனால் உறவில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் காணப்படும். அதிக பணவரவு இருக்கும். யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது ரொம்பவே நல்லது.  (Image: Freepik)

வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உரையாடுவதற்கு முன்பு கவனம் தேவை. நிதானமான அணுகுமுறை தேவை. பணிகளை துல்லியமாக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். உங்க துணையிடத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவினங்கள் ஏற்படும்.  (Image: Freepik)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link