சேரன் மற்றும் புகழ் இணைந்து நடிக்கும் கோலி சோடா வெப் சீரிஸ்! ரிலீஸ் எப்போது?

Mon, 26 Aug 2024-1:08 pm,

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும். இதில் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை உள்ளது.

 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின், அதிரடியான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர்  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த சீரிஸில் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

மேலும் இவர்களுடன் பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி, சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

 

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் SN அருண்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட 7 இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link