உங்களுக்குள் இருக்கும் சூப்பர்மேனை ஆக்டிவேட் செய்வது எப்படி?
காலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். எழுந்ததும் ஒரு சொம்பு தண்ணீரை குடித்துவிடுங்கள். நாள் முழுவதும் குறிபிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
மிக முக்கியமாக காலை நேரத்தில் தியானம் செய்ய வேண்டும். உடற்பயிற்சியை முடித்தவுடன் தினமும் காலையில் 15 நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள். அப்போது மனதை ஒரு நிலைப்படுத்தி கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் உணவை பிரித்து ஊட்டச்சத்துக்கு மிக்க உணவுகளை சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இரவு நேரத்தில் கடினமான உணவுகளை சாப்பிட வேண்டாம்.
தினமும் ஆடைகளை விதவிதமாகவும், மேட்சிங்காகவும் அணியுங்கள். உங்களை நீங்கள் மிகவும் அழகாக வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் மீதான தன்னம்பிக்கை வளரும்.
குறைவாக பேசுங்கள். சத்தமாக பேசாதீர்கள். வாக்குவாதங்களை தவிர்த்துவிட்டு அமைதியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். இவையெல்லாம் உங்களின் மேனரிசத்தை வளர்க்கும்.
பேசும் வார்த்தைகளை தெளிவாகவும், சுருக்கமாகவும் பேச பழகிக் கொள்ளுங்கள். என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சுருக்கமாக சொல்லும்போது, உங்கள் மீது மதிப்பு கூடும்.
தினசரி அரைமணி நேரமாவது புதிய விஷயங்கள் குறித்து படிக்கவும். அவற்றை உங்கள் வாழ்க்கை முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடிக்கடி பயணம் செய்யுங்கள். புதிய மனிதர்களை சந்திக்கவும்.