அடிமுட்டாள்களும் அறிவாளியாக மாறலாம்! ‘இதை’ செய்தால் போதும்..

Thu, 22 Feb 2024-3:51 pm,

அறிவாளிகள் யாரும் பிறக்கும் போதே புத்திக்கூர்மையுடன் பிறப்பதில்லை. அவரவர்கள், தங்களின் வாழ்க்கையில் இருந்து எடுத்துக்கொள்ளும் பாடங்களை வைத்து, அதை படிப்பினையாக எடுத்துக்கொண்டு வளர்வதனால்தான் அவர்கள் அறிவாளிகளாக உருவெடுக்கின்றனர். அது மட்டுமன்றி நாம் எப்படி சாப்பிடுகிறோம், என்ன சாப்பிடுகிறோம், நமது தினசரி நடவடிக்கைகள் என்ன என்பதை வைத்தும் நமது புத்திக்கூர்மையை யூகிக்கலாம். தற்போது தன்னை அடிமுட்டாள் என நினைத்துக்கொண்டிருக்கும் பலரும் கூட, சில டிப்ஸ்களை பின்பற்றினால் கண்டிப்பாக புத்திக்கூர்மை பெற்றவராகவும், அறிவாளியாகவும் உருவாகலாம். அதற்கான டிப்ஸை இங்கு பார்க்கலாமா?

தினமும் புதிய விஷயங்களை படிப்பதால் நமக்கு பல்வேறு விஷயங்கள் குறித்த புரிதல் ஏற்படுகிறது. பலர், கதை புத்தகத்தை படிப்பவர்களை ஏளனமாக பார்ப்பர். ஆனால், கதைகளின் மூலமாகவும் நாம் பல வாழ்க்கை பாடங்களை பெற்றுக்கொள்ளலாம். அல்லது, சுய சரிதைகள், வாழ்க்கை குறிப்புகள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் பிடிக்கும் என்றால் அவற்றையும் படிக்கலாம். இதனால், உங்களது சொல்லதிகாரி அகலமாகும். பல விஷயங்கள் தெரிந்த மனிதராக மாறுவீர்கள். 

உங்களுடன் ஒத்த கருத்துடையவர்களை நண்பர்களாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களை பிடிக்காத, நீங்கள் எது செய்தாலும் பாராட்டாத, பொறாமைப்படும் நண்பர்களிடம் இருந்து தள்ளியே இருங்கள். அது மட்டுமன்றி, நீங்கள் யாரை அறிவாளி என்று நினைக்கிறீர்களோ, அவர்களுடனும் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள். நிறையவே கற்றுக்கொள்ளலாம். 

தினமும் உடற்பயிற்சி செய்வதால் உங்களுக்குள், உங்களுக்கே தெரியாமல் பல மாற்றங்கள் உருவாகும். இதனால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல நிலையை அடைவீர்கள். தினசரி உடற்பயிற்சியால் உங்களது மூளை திறன் நன்றாக செயல்படும். இதனால், நீங்கள் ஷார்ப் ஆனவராக உணர்வீர்கள். 

புதிதாக எந்த விஷயத்தை நாம் முனைப்புடன் கற்றுக்கொள்ள முயலும் போதும் நமக்கே தெரியாமல் நமக்குள் சுய ஒழுக்கம் உருவாகும். அதனால், ஏதேனும் புதிய திறனை கற்றுக்க்கொள்ள முயற்சி செய்யுங்கள். புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள முயல்வதும் இதில் அடங்கும். இரு மொழி பேசுபவர்கள் எப்போதும் பிறரை விட கொஞ்சம் புத்திசாலியாகவே இருப்பார்கள்.

தியானம் செய்வது, நாம் நினைத்ததை நடத்தி முடிக்கும் சக்தியை நமக்கு அளிக்கிறது. இதனால், நாம் மன குழப்பத்தை கட்டுப்படுத்தி, பதற்றத்தை தவிர்க்க முடியும். தியானம் செய்தால், நாம் உணர்வு ரீதியாக அறிவாளியாக மாற முடியும். இதனால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள நமது மூளைக்குள் இடம் இருக்கும். 

அறிவாளியாக மாறுவதற்கு அனைவரும் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று, செல்போன் உபயோகத்தை கட்டுப்படுத்துவது. அதிக செல்போன் பயன்பாடு நமது மூளையின் செயல்பாட்டை மழுங்கடிக்க செய்யும். அதனால், சாப்பிடும் போது, உறங்குவதற்கு முன்பு செல்போன் உபயோகிப்பதை கட்டுப்படுத்தவும். 1 வாரம் இதனை செய்து பார்த்தால் நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link