செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
உலகில், மொத்தம் 3.8 மில்லியன் பேர் செல்போனிற்கு அடிமையாக கிடப்பதாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. கணக்கிலடங்கா சமூக வலைதளங்களாலும், கொட்டிக்கிடக்கும் கண்டண்டுகளாலும் நாம் நமக்கே தெரியாமல் ஒரு நாள் முழுவதும் சமூக வலைதளத்திற்காக செலவிடுகிறோம்.
ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு அடிமையானதை கண்டுபிடிப்பது எப்படி?
>போன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் போனை கீழே வைத்தவுடன் தோன்றுவது >போன் உபயோகிக்கவில்லை என்றால், பதற்றம் போன்ற மன நிலை உருவாகுவது. >நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது. >போன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று தோன்றியும் அதில் வெற்றி பெறாமல் இருப்பது. >உடலிலும் மனதிலும் என்ன பிரச்சனை இருந்தாலும் செல்போன் பயன்பாட்டை நிறுத்தாமல் இருப்பது.
Notification Settings:
பலருக்கு, அவர்கள் வைத்திருக்கும் வெவ்வேறு ஆப்களில் இருந்து வரும் அழைப்புகளால் (Notification) செல்போனை மீனும் உபயோகிக்க வேண்டும் என்று தோன்றலாம். இதை தவிர்க்க, உங்கள் போன் செட்டிங்ஸிற்கு சென்று நீங்கள் அதிக நேரம் செலவிடும் செயலியின் நோட்டிஃபிகேஷனை ஆஃப் செய்து விடலாம்.
Schedule:
காலையில் எழுவதற்கு, வேலை செய்வதற்கு என அனைத்திற்கும் ஒரு நேரத்தை குறிப்பிட்டு வைத்திருப்பதை போல, உங்கள் செல்போனை உபயோகிப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட அட்டவணையை நிர்ணயிக்க வேண்டும்.
இரவு நேரத்தில் போன் உபயோகிப்பது:
என்ன நடந்தாலும் இரவு நேரத்தில் போன் உபயோகிக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் தூக்கமும் பாதிக்கும், உங்கள் மன நலனும் பாதிக்கும்.
Use Tracker:
எந்த செயலியை எவ்வளவு நேரம் உபயோகிக்கிறீர்கள் என்பதை, ட்ராக்கரை வைத்து கணக்கிடுங்கள். இதை வைத்து, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அந்த செயலியே தானாக வெளி வந்து விடும்.
Seek Help:
உங்களால் இந்த பிரச்சனையில் இருந்து தனியாக மீள முடியவில்லை என்றால், ஒரு மன நல ஆலோசகரிடமோ, நீங்கள் பேச விரும்பும் நபரிடமோ சென்று உதவி கேட்பதில் தவறே இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.