தொப்பை கொழுப்பை சட்டென கரைய வைக்கும் கிச்சன் கில்லாடிகள்
நம் தொப்பை கொழுப்பை கரைத்து (Belly Fat) உடல் எடையை குறைப்பதில், நம் சமையலறை பல பொக்கிஷங்கள் நிறைந்துள்ள ஒரு புதையல் என்றே கூறலாம். நம் சமையலில் பயன்படுத்தப்படும் பல உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகின்றன. இவற்றை சாப்பிடுவதன் மூலம், உடல் எடை குறைப்பதில் பயனுள்ள நன்மைகள் கிடைக்கின்றன.
நம் உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதில் இவை நல்ல விளைவுகளை காட்டுகின்றன. நம் சன்றாட சமையலில் பயன்படும் பல பொருட்கள் உடல் பருமனை குறைக்க உதவுகின்றன. நம் உடல் எடையை குறைப்பதில் மிக அதிக அளவில் நன்மை அளிக்கக்கூடிய சில நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெந்தயம் (Fenugreek Seeds) கொலஸ்ட்ராலைக் குறைப்பது முதல் எடை இழப்பு வரை பல பலன்களைக் கொண்டுள்ளது. இவற்றை வெவ்வேறு வழிகளில் உணவில் சேர்க்கலாம். இருப்பினும், எடை இழப்புக்கு வெந்தய விதைகளை இரண்டு வழிகளில் உட்கொள்வது மிகவும் சிறப்பான வழியாக கருதப்படுகின்றது. வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் அதன் நீரை குடிக்கலாம். அல்லது ஊறிய விதைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு தேநீர் போல் அருந்தலாம். இதன் மூலம் எடை குறையும், தொப்பை கொழுப்பும் கரையும்.
உடல் எடையை குறைக்க பூண்டும் (Garlic) சாப்பிடலாம். பூண்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதில் விளைவைக் காட்டுகிறது. தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிடலாம். இது தவிர, காய்கறிகள், சாலடுகள் மற்றும் சூப்களில் சேர்த்தும் சாப்பிடலாம்.
அரை முதல் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை (Cinnamon) எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த தண்ணீரை தினமும் உட்கொள்வதால், உடல் பருமன் குறையத் தொடங்குகிறது. இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்றம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை தொடர்பான நன்மைகளை வழங்குகிறது.
உடலில் வலி இருந்தாலோ, வயிறு உப்பச பிரச்சனை இருந்தாலோ அல்லது உடல் எடையைக் குறைக்க விரும்பினாலோ இஞ்சியை உட்கொள்ளலாம். இஞ்சியின் கொழுப்பை எரிக்கும் பண்புகள் அவற்றின் விளைவை விரைவாகக் காட்டுகின்றன. இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை தேநீர் போல் பருகவும்.
எடையைக் குறைக்க சீரக (Cumin Seeds) நீர் பயனுள்ளதாக இருக்கும். இந்த தண்ணீரை தயாரிக்க, அரை தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை வெதுவெதுப்பான பதத்தில் குடிக்கவும். சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரையும் காலையில் குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.