காதல் தோல்வி ஏற்பட்ட பிறகு முன்னாள் காதலியை மறப்பது எப்படி?
அப்படியான சூழலில் காதலித்த ஒருவரை மறப்பது, அவருடன் இருந்த கடந்த கால நினைவுகளை அழிப்பது என்பது கடினமானது என்றாலும், வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல இந்த விஷயத்தை நீங்கள் கட்டாயம் செய்தாக வேண்டும். அதனை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பயணம் செல்லுங்கள் - எந்த விதமான துக்கத்தையும் மறக்க, நீங்கள் பயணமே சிறந்தது. நீங்கள் மட்டும் செல்லக்கூடிய ஒரு தனி பயணத்தைத் திட்டமிட வேண்டும். இது சாத்தியமில்லை என்றால், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் எங்காவது வெளியே செல்லுங்கள்.
பின்தொடர வேண்டாம் - ஒருவரைப் பிரிந்த பிறகு, நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட அனைத்து வகையான சமூக ஊடக தளங்களிலிருந்தும் அவர்களை பின்தொடர்வதை நிறுத்துங்கள். இல்லையென்றால் உங்கள் வாழ்க்கை முன்னேறுவது கடினமாக இருக்கும்.
தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டாம் - பல நேரங்களில் காதலில் தோல்வி அடைந்தவர்கள் தங்கள் முன்னாள் காதலரின் நலனை ஒரு பொதுவான நண்பர் மூலம் அறிய அல்லது அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய ஆர்வம் காட்டுகிறார்கள். நீங்களும் இதைச் செய்கிறீர்கள் என்றால், இந்த பழக்கத்தை விட்டுவிட்டு உங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்.
குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் - உறவை முறித்த பிறகும் உங்கள் பார்ட்னரை உங்களால் மறக்க முடியவில்லை என்றால், இதற்கு உங்கள் குடும்பத்தில் நெருக்கமான உறவு, யாராக இருந்தாலும் அவர்களின் உதவியை நீங்கள் பெறலாம்.
உங்கள் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் அல்லது உறவினர்களுடன் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களால் உங்கள் முன்னாள் பார்ட்னரை மறக்க முடியும்.
உங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள் - உங்கள் உறவை நீங்கள் முறித்துக் கொண்டவர் உங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது உங்கள் சொந்த வாழ்க்கை மிகவும் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இப்போது இருந்து உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்.